மகன் செய்த செயலால் தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் : சோகச் சம்பவம்
தமிழ்நாடு, கள்ளக்குறிச்சியில் மகன் செய்த செயலால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரம் செய்த நண்பர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் ரங்கன். இவருடைய மனைவி செல்லம்மாள். இத்தம்பதிக்கு தேவராஜ், கோவிந்தராஜ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் கோவிந்தராஜ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தபோது, ஈரியூரைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, இருவரும் சொந்த ஊருக்கு திரும்பிய போது வியாபாரம் செய்ய திட்டமிட்டனர். இதனையடுத்து கடத்ந 2020ம் ஆண்டு நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை வாங்கி இருவரும் 17 லட்சம் ரூபாயில் ஆளுக்கு எட்டரை லட்சம் ரூபாய் கடன் பிரித்துக் கொண்டு தொழில் செய்து வந்தனர்.
தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்
இந்நிலையில், செல்வத்திடமிருந்து நெல் அறுவடை இயந்திரத்தை கோவிந்தராஜ் எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டார். இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து செல்வம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜ் மற்றும் தந்தை ரங்கன், தாயார் செல்லம்மாள் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், நேற்று இரவு ரங்கன், அவரது மனைவி செல்லம்மாள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
உடனடியாக அக்கம், பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டனரா இல்லை வேறு யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |