துபாயில் வேலைக்காக சென்ற தமிழர் சுட்டுக் கொலை: பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைத்து சித்ரவதை
துபாயில் உதவியாளர் பணிக்கு சென்ற தமிழர் முத்துக்குமரனை ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம்.
முத்துக்குமரனை சுட்டுக் கொன்றதாக 24 வயது இளைஞர் குவைத்தில் கைது.
வேலைக்காக வெளிநாடு சென்ற தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் துபாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திடம் பணத்தை செலுத்தி விட்டு, கடந்த 3ம் திகதி குவைத்-திற்கு தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா லஷ்மங்குடி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார்(30) சென்றுள்ளார்.
ஆனால் துபாயில் முத்துக்குமாருக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு பதிலாக பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
முத்துகுமாருக்கு வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில், வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களிலேயே தனக்கு வேலை பிடிக்கவில்லை என்று குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை முத்துக்குமரன் தொடர் கொள்ள முயன்ற போது, ஆத்திரமடைந்த பண்ணை முதலாளி அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.
கடந்த 3ம் திகதி துபாய்க்கு சென்ற முத்துக்குமார் இறுதியாக 6ம் திகதி அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார், அதற்கு அடுத்த நாள் குமரனை தொடர்பு கொள்ள அவரது குடும்பம் முயற்சி செய்த போது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக இது தொடர்பாக 24 வயது குவைத் இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் குவைத் நாளிதழான ‘இமான் மேட் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குவைத்தில் பணிபுரியும் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்ட உடலை நேரில் கண்டு இறந்தவர் முத்துக்குமரன் என்பதை உறுதி செய்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஸ்வீடன் தேர்தல்: நூலிழையில் தோல்வியை தழுவியது பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் ஆளும் கட்சி
இதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், முத்துக்குமரனின் மனைவி தன்னிடம் அளித்த மனு தொடர்பான, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.