ட்ரம்பினால் ரூ 34,642 கோடி இழப்பை சந்திக்கும் தமிழ்நாடு? அதிர்ச்சி அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பினால் தமிழ்நாடு ரூ.34,642 கோடி இழப்பினை சந்திக்கலாம் என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்பு
ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பினால் தமிழ்நாட்டிற்கு பாரிய இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, ட்ரம்பின் வரி விதிப்பு ஜவுளித் தொழிலை மோசமாக பாதிக்கும்.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் அமெரிக்கா 20 சதவீதம் பங்களிக்கிறது. அதே சமயம் 20240-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஏற்றுமதி மதிப்பில், அமெரிக்கா 32 சதவீதம் பங்களித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் பாதகமான தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும், ஜவுளி மற்றும் வைரம், நகைகள், இயந்திரங்கள் மற்றும் வாகன பாகங்கள் உள்ளிட்ட தொழில்கள் எதிர்கொள்ளும் வேலை இழப்புகள் 13 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
3.93 பில்லியன் டொலர்கள்
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு இந்த வரி விதிப்பால் 3.93 பில்லியன் டொலர்கள் இழப்பை சந்திக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.34,642 ஆகும்.
இதில் ஜவுளித் தொழிலுக்கு மட்டும் ரூ.14,280 கோடி (1.62 பில்லியன் டொலர்கள்) இழப்பு ஏற்படும் பாதிப்பு உள்ளது என மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வரி அதிகரிப்பால் சுமார் 30 பேர் வேலையை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |