தமிழகத்தில் பாடசாலை திறக்கும் திகதிகள் குறித்து வெளியான புதிய தகவல்
இந்தியாவில் தமிழகத்தில் கல்வி துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பாடசாலை திறக்கும் திகதி குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாடசாலை விடுமுறை
பாடசாலைகளில் ஆண்டுத் தேர்வுகள் நிறைவடைந்து, மாணவர்கள் கோடை விடுமுறையில் இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து வருகின்றார்கள். ஆகவே பாடசாலை மாணவர்களுக்கு இதனால் விடுமுறை வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே இதை தீர்க்கும் வகையில் கல்வி துறையின் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த அறிக்கையை வெளியிட்டார். அதாவது திட்டமிட்டப்படியே பாடசாலைகள் திறக்கப்படும். விடுமுறையில் எந்தவோரு மாற்றமும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
பாடசாலைகள் திறக்கும் திகதிகள்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் திகதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் திகதியும் பாடசாலைகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் என்பன வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.