ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை: சில சுவாரஸ்ய தகவல்கள்
தமிழ் திரைப்பட நடிகை ஒருவர், அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ளார். பல மாதங்கள் கடினமான பயிற்சிக்குப் பின், அமெரிக்க ராணுவத்தின் சட்டத்தரணியாக இணைந்துள்ளாராம் அவர்.
அமெரிக்க ராணுவத்தில் ஒரு தமிழ் நடிகை
இந்திய வம்சாவளியினரான அகிலா நாராயணன், கடந்த ஆண்டு, காதம்பரி என்னும் திகில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அமெரிக்காவில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவரும் அகிலாவுக்கு, கலை மீது ஆர்வம் இருப்பதைப் போலவே, ராணுவத்தில் சேர்வதிலும் அகிலாவுக்கு ஆர்வமாம். ஆகவே, பெற்றோர் சம்மதத்தின் பேரில் ராணுவத்தில் இணைந்த அகிலா, பல மாதங்கள் கடினமான பயிற்சிக்குப் பின் அமெரிக்க ராணுவத்தில் சட்டத்தரணியாக இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்வதால், தான் வாழும் நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் ராணுவத்தில் இணைந்த அகிலா, ராணுவ வீரர்களுக்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற்றுவாராம்.
அத்துடன், ‘Nightingale School of Music’ என்ற பெயரில் இசைப்பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறாராம் அகிலா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |