நாடாளுமன்றத்தில் ஒலிக்க போகும் தமிழக பெண்களின் குரல் - யாரெல்லாம் தெரியுமா?
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஐந்து பெண்கள் வெற்றி பெற்றுள்ளனனர்.
மக்களவை தேர்தல் 2024
அதிக மக்கள் தொகையை கொண்ட இந்திய நாட்டின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி, பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.
குறித்து தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று, கடந்த 4 ஆம் திகதியன்று வாக்கு எண்ணிக்கை வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல் முடிவானது ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே உற்று நோக்கி பார்க்க வைத்தது.
காரணம், இது இந்தியா கூட்டணி மற்றும் ஆளும் பாஜக அரசுக்கு இடையேயான தேர்தலாக மட்டுமன்றி, ஜனநாயகம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான தேர்தலாக பார்க்கப்பட்டது.
பாஜக கட்சியானது பிற கட்சியின் கூட்டணியுடன் மொத்தம் 12 தொகுதிகளில் நின்றது.
திமுக-இந்தியா கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளில் நின்றது. இதில் திமுக புதுச்சேரி உள்பட, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட இம்முறை நடைபெற்ற தேர்தலில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் சுமார் கட்சி ரீதியாகவும், சுயேட்சையாகவும் 76 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர்.
அந்தவகையில் இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்க போகும் தமிழக பெண்களின் குரல் யாருடையது என்று பார்க்கலாம்.
கனிமொழி
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறையும் இவரே தூத்துக்குடியில் வெற்றி பெற்றார்.
ராணி ஸ்ரீகுமார்
தென்காசி தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக சென்றுள்ளார்.
தமிழச்சி தங்கபாண்டியன்
தென் சென்னையில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். இவர் 5 லட்சத்து 16 ஆயிரத்து 628 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட மூன்று பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜோதிமணி
கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி 5 லட்சத்து 33 ஆயிரத்து 567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்.
வழக்கறிஞர் சுதா
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட சுதா 5 லட்சத்து 18 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் நாடாளுமன்றத்திற்கு செல்வது இதுவே முதன் முறையாகும்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டு வழக்கறிஞர் சுதா, மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் வெற்றியால் இந்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |