கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி இலவச சேவையை நிறுத்தியது!
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை வரம்பற்ற இலவசமாக வழங்கப்பட்டது.
தற்போது இந்த இலவச சேவையை திடீரென கூகுள் நிறுவனம் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்தும் பயன்படுத்த முடியாமல் போனது.
முன்னதாக செப்டம்பர் 30, 2020 முதல் இலவச வரம்பற்ற க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்து தற்போது இதனை நிறுத்தியது.
கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது. இருப்பினும் ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.