சுவிஸ் நிறுவவனமொன்றில் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக ஊதியம் பெறும் இந்திய வம்சாவளியினர்
சுவிஸ் நிறுவவனமொன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக ஊதியம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
333 மடங்கு அதிக ஊதியம் பெறும் இந்திய வம்சாவளியினர்
அவரது பெயர், வசந்த் நரசிம்மன். 1970களில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களான களத்தூர் நரசிம்மன், கீதா நரசிம்மன் தம்பதியருக்கு அமெரிக்காவில் பிறந்தவர் வசந்த்.
இந்திய அமெரிக்க மருத்துவரான வசந்த், 2018ஆம் ஆண்டு முதல் சுவிஸ் பார்மசூட்டிக்கல் நிறுவனமான நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவருகிறார்.
2023ஆம் ஆண்டு, வசந்த் 16.25 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வருவாய் ஈட்டியுள்ளார் என Bloomberg நிறுவனம் தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், வசந்தின் ஊதியம் அவரது சக ஊழியர்களின் வருவாயைவிட சுமார் 333 மடங்கு அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |