போர்லாம் வராது இது வெறும் அரசியல் விளையாட்டு என்றனர்! ஆனால் வந்துவிட்டது: உக்ரைனில் இருக்கும் தமிழ் மாணவர்
உக்ரைனில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவும் நிலையில் அங்கு தங்கி படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சில முக்கிய விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த பர்வேஷ் என்ற மாணவர் தொலைபேசி வாயிலாக பேசுகையில், இங்கு வினிச்சியா என்ற பகுதியில் நாங்கள் உள்ளோம்.
தலைநகரில் தான் பெரிய பிரச்சனை நிலவுகிறது, இங்கு அவ்வளவாக பிரச்சனை இல்லை. தலைநகர் அருகே இருப்பவர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்கின்றனர்.
அங்கு கடைக்கு சென்று 10 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி வந்தோம்.
கல்லூரியில் எங்களிடம், இது அரசியல் விளையாட்டு தான் போர்லாம் வராது என்றார்கள், ஆனால் இது போன்ற நிலை வந்துவிட்டது.
எங்களை அழைத்து செல்லுமாறு இந்திய வெளியுறவுத்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்.