எவ்வளவு கொழுப்பு, திமிரு? செருப்பை கழட்டி அடிப்பார்கள் என ஆளுநரை கடுமையாக விமர்சித்த உதயநிதி
டிடி தமிழ் நிகழ்ச்சியில் திராவிடம் என்ற சொல்லை தவிர்த்து பாடப்பட்ட தமிழ்த்தாய் விவகாரத்திற்கு உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தி தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வரியை பாடாமல் தவிர்க்கப்பட்டது. இதற்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கோரியது. மேலும், இந்த சம்பவத்திற்கும் ஆளுநருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமும் அளித்துள்ளது.
உதயநிதி ஆவேசம்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஆளுநர் ரவி அவர்களே. எவ்வளவு திமிரு? எவ்வளவு கொழுப்பு? ஒரு கூட்டம் நடத்துகிறார், சரி நடத்தட்டும்.
நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியா? வெறும் தபால்காரர் மட்டும்தான்.
எங்களது முதலமைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் சொல்வது தான் உங்கள் வேலை. உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். நீங்கள் ஆர்என் ரவி அல்ல. ஆர்எஸ்எஸ் ரவி.
உங்கள் சித்தாந்தங்களை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், செருப்பை கழட்டி அடிப்பார்கள்" என்று ஆவேசமாக பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |