அயல்நாட்டில் தமிழர் சுட்டுக்கொலை! மேலும் இருவர் படுகாயம்
ஜமைக்காவில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில், சுபாஷ் அமிர்தராஜ் என்ற தமிழர் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறார்.
இந்த சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கொள்ளையர்கள் சிலர் திடீரென சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும் பலத்த காயம் அடைந்த இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த விக்னேஷின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |