முழங்கால் அளவு தண்ணீரில் நடந்தும் மழை பாதிப்பில்லை என ஏமாற்றுவதா? கனிமொழியை விமர்சித்த தமிழிசை
தூத்துக்குடியில் மழை பாதிப்பு இல்லை என்று கனிமொழி கூறியது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழிசை விமர்சனம்
தமிழக மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் தொகுதி எம்பி கனிமொழி நேரில் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தூத்துக்குடியில் மழையால் பாதிப்புகள் ஏற்படவில்லை" என்று கூறினார்.
இவரின் கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை என்று கூறும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் பொய்யா?
நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்யா? முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து கொண்டு மழையால் பாதிப்பு இல்லை என்று மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல்?
மழை,வெள்ள பாதிப்பால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் போது மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறீர்களே? உங்கள் பார்வையில் மழை, வெள்ள பாதிப்பின் அளவுகோல் என்ன?" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |