கையில் மெகந்தி போட்டு விவாகரத்தை கொண்டாடிய பெண்.., வைரலாகும் வீடியோ
பெண் ஒருவர் கையில் மெகந்தி போட்டுக் கொண்டு தனது விவாகரத்தை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களால் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளில் மெகந்தி அல்லது மருதாணியை போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சில சமயங்களில் ஆண்களும் கைகளில் மருதாணி வைக்கின்றனர்.
ஆனால், இங்கு பெண் ஒருவர் தனது விவாகரத்தை கொண்டாடுவதற்காக கையில் மெகந்தி போட்டுள்ளார்.
அதாவது அவர், தன்னுடைய கையில் திருமண உறவில் தான் கடந்து வந்த பாதைகளை கூறும்படி மெகந்தி போட்டுள்ளார்.
அதில், இருவரது மனங்கள் ஒன்றிணைவது முதல் கணவரின் குடும்பத்தாரால் அடிமையாக நடத்தப்பட்டு நசுக்கப்பட்டது வரை படம் வரைந்து காண்பித்துள்ளார்.
மேலும், கணவரிடம் வாக்குவாதம் நடத்துவதையும் கான்பித்துள்ளார். இறுதியாக, விவாகரத்து முடிவெடுத்து இருவரும் பிரிவது தொடர்பாக மெகந்தி வரைந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |