ரூ.11 கோடி பரிசுத் தொகையை வென்ற குகேஷ் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?
18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள டி.குகேஷ் 1.35 மில்லியன் டொலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
ரூ.11 கோடி பரிசு
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இவர், தனது 18 வயதிலே உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு குகேஷ் கிட்டத்தட்ட ரூ.11 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது. FIDE இன் விதிகளின்படி, வீரர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் 200,000 டொலர் (சுமார் ரூ. 1.68 கோடி) பெறுகிறார்கள்.
மீதமுள்ள பரிசு இரண்டு இறுதிப் போட்டியாளர்களிடையே பிரிக்கப்படுகிறது சாம்பியன்ஷிப்பிற்கான மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 21 கோடி ஆகும்.
அதன்படி, மூன்று கேம்களை வென்று 600,000 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 5.04 கோடி) குகேஷ் பெற்றுள்ளார். டிங் லிரன் இரண்டு கேம்களை வென்று 400,000 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 3.36 கோடி) பெற்றார்.
மீதமுள்ள 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இரு வீரர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது. மொத்தத்தில், குகேஷ் 1.35 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.34 கோடி ஆகும்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு குகேஷின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.21 கோடியாக உயர்ந்துள்ளார். இவர், இந்தியாவில் 30% வரி ஸ்லாபின் கீழ் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி அவர் சுமார் ரூ.3 கோடி வருமான வரி செலுத்துவார். மேலும், கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனவே குகேஷ் மொத்த வருமான வரியில் சுமார் 4.67 கோடி ரூபாய் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், உலக அரங்கில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய குகேஷுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |