என்னை திருமணம் செய்து கொள்! இல்லேன்னா செத்து போ...16 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞன்... பின்னர் நடந்த விபரீதம்
தமிழகத்தில் இளைஞனின் பாலியல் தொல்லை காரணமாக 16 வயது சிறுமி இறந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்னபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.
இவரது மகன் பாண்டியன் (19). இவர் 16 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 20ம் திகதி திருமணம் செய்து கொள்ளுமாறு பாலியல் தொந்தரவு கொடுத்தார். புகாரின் பேரில் பாண்டியனை போக்சோ சட்டத்தில் பண்ருட்டி மகளிர் பொலிசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த பாண்டியன் மீண்டும் ஜூலை 26ம் திகதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பின்னர், தன்னை திருமணம் செய்து கொள், இல்லையெனில் பூச்சிமருந்து சாப்பிட்டு செத்து போ என கூறி விஷ மருந்தை கொடுத்துள்ளார்.
மனமுடைந்த சிறுமி கடந்த 2 ம் திகதி அந்த விஷத்தை சாப்பிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து சிறுமியின் தந்தை 4ம் திகதி புகார் கொடுத்தார். அதை தொடர்ந்து கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பாண்டியனை தேடி வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி பாண்டியனை பொலிசார் கைது செய்துள்ளனர்.