மு.க.ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்த முதல்வர் விஜய்: வாசலில் வரவேற்ற உதயநிதி
தமிழ்நாடு முதல்வர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரை இல்லத்தில் சந்தித்தார்.
திமுக தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துக்கொண்டு, தலைமை செயலகத்தில் இருந்து நேராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்றார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றபோது, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியுடன் வாசலில் நின்று வரவேற்றார்.
பின் முதல்வர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மலர்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்தார்.

மேலும் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு திமுக 75' என்ற புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.
மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலர் வைகோவையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |