மு.க ஸ்டாலின் முதல்வரான பின் முதல் தமிழக பட்ஜெட் தாக்கல்! அமளியில் ஈடுபட்ட அதிமுக... பட்ஜெட் சிறப்பம்சங்கள்
தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. மைக் கொடுக்க வேண்டும் என அதிமுக அமளியில் ஈடுபட்ட நிலையிலேயே வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் ஆனது தற்போது தாக்கல் செய்யப்படுகிறது
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்
பொதுவிநியோக திட்டத்தில் முன்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும் ; அனைத்து துறைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்படும்
ஆண்டுதோறும் ஜூன் 3ல் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ.10 லட்சம் வழங்கப்படும்
காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்
கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கீடு
பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை; ஜி.எஸ்.டி. வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன
நீர் ஆதாரங்களை பாதுகாக்க அடுத்த பத்தாண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும். தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு 30கோடி செலவில் அமைக்கப்படும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு 2,29,216 மனுக்களுக்கு தீர்வு
உலகப் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படும்
உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.