வெளிநாட்டில் இருந்து தமிழ் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய உதவித்தொகை! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் உதவித்தொகையாக கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சுவாமிநாதன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு 17 வயதில் ஸ்வேகா என்ற மகள் உள்ளார்.
இந்த சிறுமி தனது 14 வயதிலிருந்தே Dexterity Global நிறுவனத்தின் குழுமத்தால் பயிற்சி பெற்று தொழில் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒரு பகுதியாக மாறியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு அமெரிக்காவில் உள்ள Chicago பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை படிக்க சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையை பெற்று சாதனை படைத்துள்ளார்.
THIS IS HUGE!! A 17-yr-old Dexterity to College fellow from Erode in Tamil Nadu, the daughter of a small farmer, Swega has been accepted to the University of Chicago (@UChicago), one of the top 10 universities in the world, on a full scholarship worth ₹3 crores. #ThisIsDexterity pic.twitter.com/hsSs4w4Djt
— Sharad Vivek Sagar (@SharadTalks) December 20, 2021
இது குறித்து அந்த சிறுமி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். Dexterity Global நிறுவனம் இந்த திட்டத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கியது.
இது கிராமப்புற அல்லது தொலைதூர இந்திய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பின் தங்கிய மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாக அமைந்துள்ளது.