தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும்? - நேரக்கட்டுப்பாடை அறிவித்த தமிழக அரசு
தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நேரநிர்ணயத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி
வரும் அக்டோபர் 20 ஆம் திகதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
வெளியூரில் வேலைப்பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று, குடும்படுத்துடன் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து கொண்டாடுவர். தமிழ்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, 20,378 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேரக்கட்டுப்பாடு
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும்பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீ பற்ற கூடிய இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |