இனி 100% PF பணம் எடுக்கலாம் - அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது.
100% PF பணம்
இதில், PF விதிகளை தளர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், ஒரு வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் வேலையில்லாமல் இருந்த 1 மாதத்திற்கு பின்னர் PF இருப்பில் 75%, மற்றும் 2 மாதங்களுக்குப் பின்னர் மீதமுள்ள 25% எடுக்க அனுமதிக்கப்பட்டார்.
தற்போதைய விதிப்படி, ஊழியர்கள் தங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை 100% வரை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், பகுதி அளவு பணம் எடுப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பணம் தேவைக்கான காரணங்கள் 13 இல் இருந்து குறைக்கப்பட்டு, அத்தியாவசியம், வீட்டுத் தேவை மற்றும் சிறப்பு சூழ்நிலை என்று 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணம் எடுக்கும் உச்சவரம்பு கல்வி தேவைக்காக 3 இல் இருந்து 10 முறையாகவும், திருமண தேவைக்காக 3 இல் இருந்து 5 முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல், இயற்கை சீற்றம், நிறுவனம் மூடல், தொடர்ச்சியாக வேலையின்மை, தொற்றுநோய் பரவல் ஆகிய சிறப்பு சூழ்நிலைகளின் போது காரணம் தெரிவிக்காமல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
முன்னதாக ஜனவரி 2026 ஆம் ஆண்டு முதல் PF பணத்தை ATM மூலம் எடுக்கும் நடைமுறை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |