இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா! தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவித்த அரசு
கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவி வட மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலையில் நம் மாநிலத்தில் பரவிவிடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு வரும் திங்கட் கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதில், அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதியில்லை.
பெரிய கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை. தனியாக செயல்படுகிற மளிகைக்கடைகள் போன்ற சிறிய கடைகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கம்போல் செயல்படும் என்றும், 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் சென்னை உட்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.