கேரள லொட்டரியில் தமிழ்நாட்டுக்காரருக்கு கிடைத்த மிகப்பெரிய தொகை
கேரளா ஓணம் பம்பர் லொட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கு கிடைத்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
கேரளா லொட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஓணம் பம்பர் லொட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான குலுக்கல் கடந்த ஒக்டோபர் 9-ம் திகதி நடைபெற்றது. ஓணம் பம்பர் லொட்டரியில் முதல் பரிசை வெல்லும் நபருக்கு ரூ.25 கோடி பரிசு தொகை கிடைக்கும்.
இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். அதேபோல, மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் கிடைக்கும்.
இதில், மொத்தமாக 72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் கேரளா லொட்டரி துறைக்கு ரூ.360 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அல்தாஃப் பாஷா என்பவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், முதல் பரிசுக்கான டிக்கெட்டை விற்பனை செய்யும் ஏஜென்ட்டிற்கு கமிஷன் தொகையாக 10% வழங்கப்படும். அதன்படி, பரிசுத்தொகையில் இருந்து கமிஷன் தொகையாக இரண்டரை கோடி ரூபாய் கிடைக்கும்.
அந்தவகையில், முதல் பரிசுக்கான லொட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த ஏஜென்ட் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
முதலில் ஜீனேஷ் என்ற முகவர் விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் நேரடி முகவர் என்பதும் துணை முகவர் நாகராஜ் என்பதும் தெரியவந்தது. இதில், நாகராஜ் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
அதன்படி, ஜீனேஷுக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல, தமிழ்நாட்டைச் சேர்ந்த துணை முகவராக நாகராஜ் என்பவருக்கு ரூ.2.25 கோடி ரூபாய் கமிஷன் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |