தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உதயமாகிறதா? அரசு தரப்பில் சொல்வது என்ன
தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாகிறது என்ற தகவலுக்கு அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
7 புதிய மாவட்டங்கள்
தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. அதாவது கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகிய 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.
இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. இதனால், நீண்ட நாட்களாக உள்ள தங்களது எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
அரசு கூறியது..
தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாவது தொடர்பான தகவல்கள் வெளிவந்த நிலையில் மாநில அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது புதிய மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், வெளிவந்த தகவல் வதந்தி என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உதயமாக போகிறது என்ற தகவலுக்கு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |