டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - தென்னாப்பிரிக்க அணியில் தமிழ்நாட்டு பூர்விக வீரர்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் தமிழக வம்சாவளி வீரர் செனுரான் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அவுஸ்திரேலியாவின் லார்ட்ஸ் மைதானத்தில், ஜூன் 11 தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இதற்கான அவுஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா அணிக்கு அணித்தலைவராக பேட் கம்மின்ஸும், துணை அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Introducing our squad for the 2025 ICC World Test Championship Final and the Qantas Men’s Test Tour of the West Indies 👊 pic.twitter.com/kZYXWKpQgL
— Cricket Australia (@CricketAus) May 13, 2025
ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குன்னமென், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Proteas Men’s head coach Shukri Conrad has today announced the 15-player squad for the highly anticipated ICC World Test Championship (WTC) Final against Australia, taking place from 11 – 15 June at Lord’s Cricket Ground in London.
— Proteas Men (@ProteasMenCSA) May 13, 2025
Temba Bavuma will lead the side, with the pace… pic.twitter.com/e76WCrd2zl
இதற்கான அணியில், டெம்பா பவுமா (அணித்தலைவர்), டேவிட் பெடிங்ஹம், கார்பின் போஸ்ச், டோனி டி ஸார்ஸி, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
செனுரான் முத்துசாமி
தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள செனுரான் முத்துசாமி, தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
31 வயதான முத்துச்சாமி, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்திருந்தாலும், அவரது பூர்விகம் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் ஆகும்.
2019 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகமான இவர், முதல் போட்டியிலேயே முதல் விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆல்ரவுண்டராக அசத்தி வரும் இவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒரு அரைசதம் உட்பட 173 ஓட்டங்கள் எடுத்து, 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |