இரண்டு மணி நேரம் தான்... பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு
தீபாவளி கொண்டாட்டத்தின் போது மாசுபடுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.
பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு
அந்த அறிவுரையின்படி, பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மக்கள் பட்டாசுகளை வெடிக்கலாம்.
குறைந்த சத்தம் மற்றும் குறைந்த காற்று மாசுபாட்டை உருவாக்கும் பச்சை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.
அதிக சப்தத்துடன் பட்டாசு வெடிப்பதையும், தொடர்ந்து பட்டாசுகளை வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே பட்டாசு வெடிக்கத் தடையும் எளிதில் தீப்பற்றக்கூடிய குடிசைகள் மற்றும் கட்டிடங்களுக்கு அருகில் பட்டாசுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |