2026 ஐபிஎல் மினி ஏலம் - பங்குபெறும் தமிழக வீரர்கள் யார்?
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பங்குபெற உள்ள தமிழக வீரர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
2026 ஐபிஎல் மினி ஏலம்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி, அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகள், 77 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது.

இதில், 240 இந்திய வீரர்களும், 110 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இதில், தமிழ் நாட்டில் இருந்து 11 வீரர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற உள்ளனர்.
தமிழக வீரர்கள்
துஷார் ரஹேஜா, ஆர் சோனு யாதவ், இசக்கிமுத்து, ஆர்.ராஜ்குமார், அஜிதேஷ், ஜதாவேத் சுப்ரமணியன், முகமது அலி, சஞ்சய் யாதவ், ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், சந்தீப் வாரியர், சன்னி சந்து ஆகிய 11 வீரர்கள் பங்கு பெற உள்ளனர்.

இதில், சந்தீப் வாரியர் ரூ.75 லட்சம் அடிப்படை விலையிலும், மற்ற 10 வீரர்களும் ரூ.30 லட்சம் அடிப்படை விலையிலும் ஏலத்திற்கு வர உள்ளனர்.

2025 TNPL தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடிய துஷார் ரஹேஜா, 9 போட்டிகளில் விளையாடி, 185.55 ஸ்ட்ரைக் ரேட்டில் 488 ஓட்டங்கள் குவித்து, தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும், இவர் விக்கெட் கீப்பர் என்பதால் அணிகள் இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சோனு யாதவ், 7 போட்டிகளில் விளையாடி, 7.98 என்ற எகானமி ரேட்டில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரராக உள்ளார்.

மேலும், திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடிய இசக்கிமுத்து, 8 போட்டிகளில் விளையாடி, 7.46 என்ற எகானமி ரேட்டில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய 2வது வீரராக உள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், ஷாருக்கான், சித்தார்த் ஆகியோர் பல்வேறு அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |