லொட்டரியில் 200 கிராம் தங்கம் வென்ற தமிழ்நாட்டு நபர்
அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியில் ஓவ்வொரு வாரமும் வாராந்திர இணைய வழி குலுக்கல் நடைபெற்று வருகிறது.
மார்ச் 3வது வாரத்தில் நடைபெற்ற குலுக்கலில் இந்தியாவை சேர்ந்த 3 நபர்களும், ஒரு பாலஸ்தீனியரும் தலா 200 கிராம் 24 காரட் தங்கம் வென்றுள்ளனர்.

வாகன ஓட்டுநர்
கேரளாவை சேர்ந்த 47 வயதான அன்சார் பூக்குஞ்சு(ansar pookunju), கடந்த 23 ஆண்டுகளாக துபாயில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது 20 நண்பர்கள் அடங்கிய குழுவுடன் கடந்த 15 ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி வாங்கி வந்துள்ளார்.

"நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்! இத்தனை வருடங்களாக நாம் இணைந்து முயற்சி செய்த பிறகு, இறுதியாக நமது முயற்சிகள் பலனளிப்பதைக் காண்பது அற்புதமாக இருக்கிறது.
அந்தப் பரிசை செலவு செய்ய உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை. தொடர்ந்து எதிர்காலத்தில் குலுக்கல்களை வாங்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
ராம்கி நடராஜன்
இதே போல், தமிழ்நாட்டை சேர்ந்த 36 வயதான விற்பனை பிரதிநிதியான ராம்கி நடராஜன்(ramki natarajan) கடந்த 10 ஆண்டுகளாக ஓமனில் வசித்து வருகிறார்.
இவர் தனது கிரிக்கெட் விளையாடும் 20 நண்பர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து, கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு மாதமும் வாங்கி வந்துள்ளார். தற்போது இவரும் 200 கிராம் தங்கம் வென்றுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் இந்தியாவில் இருந்தபோது அழைப்பு வந்தது. முதலில் ஆச்சரியமாக இருந்தது. விரைவிலே மகிழ்ச்சியாக மாறியது. இது நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும், தொடர்ந்து வாங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்தியாவை சேர்ந்த மெரில் மேரி வில்சன், விமான நிலையத்தில் விருந்தினர் சேவை முகவராக பணியாற்றும் 41 வயதான பலஸ்தீனியர் முகமது அஷூர் தலா 200 கிராம் தங்கம் வென்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |