ஏழை பெண்கள் தான் குறி! பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை... அதிர்வை கிளப்பிய பொள்ளாச்சி போன்ற மற்றொரு சம்பவம்
தமிழகத்தில் இளம்பெண்களை திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்புப் பணிக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி சம்பவம் அம்பலமான நிலையில் அது பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி அடித்து துன்புறுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கை யாரும் மறந்திருக்க முடியாது. அதே போன்ற ஒரு கொடூரம் சிவகங்கை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் ராஜா. திருமண சுபநிகழ்வுகளுக்கு வரவேற்பு நிகழ்வுகளுக்கு சிறுமிகள், இளம்பெண்களை அழைத்து செல்லும் தொழில் செய்துவருகின்றார்.
இந்நிலையில் தான் ராஜா இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்து செல்லும் பெண்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதாக பகீர் புகார் ஒன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ராஜா ஏழ்மை நிலையில் உள்ள பெண்களை குறிவைத்து வேலை கொடுப்பதாக கூறி பணத்தாசையை காட்டியுள்ளார். அத்துடன் இதுபோன்று வரும் பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி பல வி.ஜ.பிகளின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜா என்ற அந்த நபரை தனியாக அழைத்துச் சென்ற ஒரு கும்பல், பணம், நகையைப் பறித்ததுடன், பெண்களைக் கொண்டு அடிக்கவைத்து வீடியோ எடுத்து வைத்துக்கொண்டது.
அதில் ‘‘நன்றாக அடி’’ என ஆண் குரல் ஒன்று கேட்கிறது. அதன்பிறகு 3 பெண்கள் வரிசையாக வந்து, ‘‘நான் நல்லாதானே இருந்தேன். என்னை ஏன் இப்படி செய்தாய்’’ எனவும், ‘‘என்னை ஏன்டா தப்பாக வீடியோ எடுத்து வைத்துள்ளாய்’’ எனவும் கூறி அடிக்கின்றனர். அதில் கடைசியாக ஒரு பெண் அடித்து விட்டு கதறி அழுவது போல உள்ளது.
இந்த நிலையில் ராஜாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 பெண்களை வைத்து அந்த கும்பல் ராஜாவின் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகாரளித்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என கூறப்படும் நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.