நள்ளிரவு கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு எச்சரிக்கை
வடமேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
வானிலை மையம் அறிவிப்பு
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடமேற்கு வங்கக்கடலில்நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
மேலும் காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில், ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திற்கு கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், கலிங்கபட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், கோபால்பூர் (முடிசா) தெற்கு- தென்மேற்காக 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினம்- கோபால்பூர் இடையே கலிங்கபட்டினத்திற்கு அருகில் இன்று நள்ளிரவு கரையை கடக்க கூடும்.
இன்று முதல் செப்டம்பர் 2 -ம் திகதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 3-ம் திகதி முதல் 6 -ம் திகதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |