சீன நாட்காட்டியால் மாறிய பயணத்திட்டம் - நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்
tamils changed nepal trip date by chinese calendar: சீன நாட்காட்டியால் தமிழர்களின் பயணத்திட்டம் மாற்றப்பட்டு, நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. 800க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.
இவர்கள் 3 பேருந்துகள் மூலம் சென்ற நிலையில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். மீதமுள்ள 37 பேரின் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.
சீன நாட்காட்டியால் மாறிய பயணத்திட்டம்
இது குறித்து பேசிய சுற்றுலா நிறுவன நிறுவனர், அந்த சுற்றுலா பயணிகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி தான் கயிலாய யாத்திரைக்காக நேபாளம் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் நாங்கள் விண்ணப்பிக்கும் போது சீன நாட்காட்டியின் படி ஆகஸ்ட் 1 முதல் 20 வரை குதிரை ஆண்டு என்பதால் அந்த நாட்களில் ஜெயின் பக்கதர்களுக்கு மட்டுமே கோவிலில் முன்னுரிமை வழங்கப்படும். ஆகஸ்ட் 20 க்கு பிறகு விண்ணப்பியுங்கள் என நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதன் காரணமாகவே பயணத் திட்டதை ஆகஸ்ட் 23ஆம் திகதிக்கு மாற்றினோம். திகதி மாற்றப்பட்டதால் பல பயணிகள் வர முடியாமல் ரத்து செய்தனர்" என தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |