வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 3 தமிழர்கள்? வெளியான தகவல்
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் மூவர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்
இந்தோனேசியாவின் கடல் எல்லையில் தமிழர்கள் மூன்று பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34) மற்றும் கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகிய மூவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு உள்ளாகினர்.
சரக்கு கப்பலில் 106 கிலோ 'கிரிஸ்டல் மெத்' போதைப் பொருளை அவர்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என மறுத்தனர்.
தமிழர்களுக்கு பின்னடைவு
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கப்பலின் கேப்டன் விசாரணைக்கு ஆஜரானார்.
ஆனால், அவர் ஒன்லைன் வாயிலாக குறைந்த நேரமே ஆஜரானதால், குற்றம்சாட்டப்பட்ட தமிழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இந்தோனேசிய சட்டப்படி மூவரும் மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாக சிங்கப்பூர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |