திடீர் ஓய்வை அறிவித்தவுடன் கண்ணீர் விட்டு அழுத கிரிக்கெட் கேப்டன்! வைரலாகும் புகைப்படங்கள்
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார்.
தமிம் இக்பால் ஓய்வு
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டன் தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கண்ணீருடன் தனது முடிவினை தெரிவித்தார். அவர் பேசும்போது,
'இதுதான் எனக்கான முடிவு. நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக முயற்சியும் செய்தேன். இந்தத் தருணத்தில் இருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்தப் பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், வங்கதேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் தான் எனது ஊக்கம். என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறேன். அதற்கு உங்கள் பிரார்த்தனைகள் வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
தமிம் இக்பால் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் அவரது இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் அழுதது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தமிம் இக்பால், தனது 34வது வயதில் ஓய்வினை அறிவித்துள்ளார்.
241 ஒருநாள் போட்டிகளில் 14 சதங்களுடன் 8,313 ஓட்டங்களும், 70 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களுடன் 5,134 ஓட்டங்களும் குவித்துள்ளார். அதேபோல் 78 டி20 போட்டிகளில் ஒரு சதத்துடன் 1758 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
Shamsul Haque
நேற்று நடந்த ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் (D/L முறை) வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |