டி20 உலகக்கிண்ண குளறுபடி..கிரிக்கெட் வாரியத் தலைவராக மிக இளவயது தலைவர் நியமனம்
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
வங்காளதேச கிரிக்கெட்டில் உலகக்கிண்ணம் தொடர்பான குழப்பங்கள் மற்றும் தொடர் இராஜினாமாக்களைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் தலைமையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக தற்போது வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அமினுல் இஸ்லாம் புல்புலுக்கு பதிலாக தமிம் இக்பால் (Tamim Iqbal) நியமிக்கப்பட்டுள்ளார்.
வாரக்கணக்கில் நீடித்த அமைதியின்மை மற்றும் இராஜினாமாக்களுக்குப் பிறகு, நிர்வாக அமைப்பை முழுமையாக சீரமைக்க அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிம் இக்பால்
37 வயதாகும் தமிம் இக்பால் இந்த பொறுப்பை ஏற்றிருப்பதன் மூலம், வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான மின்ஹாஜுல் அபீதின், வர்ணனையாளர் அதர் அலி கான் ஆகியோர் அடங்கிய 11 பேர் கொண்ட தற்காலிகக் குழுவிற்கு தமிம் இக்பால் தலைமை தங்குவார்.
டி20 உலகக்கிண்ணத்தின்போது ஏற்பட்ட பெரும் குளறுபடியே புல்புல் தலைவர் பதவியில் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |