88 ஆண்டுகால சாதனையை முறியடித்த பெண்! இங்கிலாந்தின் முதல் இரட்டை சதம்
இங்கிலாந்து வீராங்கனையின் அதிகபட்ச ஸ்கோருக்கான 88 ஆண்டுகால சாதனையை பியூமான்ட் முறியடித்துள்ளார்.
அவுஸ்திரேலியா 473
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாட்டிங்காமின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்க்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 473 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சதர்லேண்ட் 137 ஓட்டங்களும், எல்லிசே பெர்ரி 99 ஓட்டங்களும் எடுத்தனர்.
Twitter (englandcricket)
இங்கிலாந்தின் எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி களமிறங்கியது.
எம்மா லாம்ப் 10 ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், கேப்டன் ஹெதர் நைட் 57 ஓட்டங்களும், நட் சிவெர் 78 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
88 ஆண்டுகளுக்கு பின் சாதனை
நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய டம்மி பியூமான்ட் 317 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். 1935ஆம் ஆண்டு ஸ்னோபால் 189 ஓட்டங்கள் விளாசியதே, இங்கிலாந்து வீராங்கனை டெஸ்டில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.
அதனை 208 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 88 ஆண்டுகளுக்கு பின் பியூமான்ட் முறியடித்துள்ளார். முதல் இரட்டை சதம் விளாசிய இங்கிலாந்து வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது முறையாக இரட்டை சதம் விளாசிய வீராங்கனை என்ற பெருமையை டம்மி பியூமான்ட் பெற்றார்.
What. An. Innings.@Tammy_Beaumont becomes just the eighth double centurion in women's Test cricket ?#EnglandCricket #Ashes pic.twitter.com/wSXslvum6q
— England Cricket (@englandcricket) June 24, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |