காசாவில் 800 அகதிகள் தங்கிருந்த ஐ.நா கட்டிடம் மீது தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்பு
காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம் மீது மோசமான டாங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடு அமைப்பு கட்டிடம் மீது தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இருப்பிட கட்டிடம் மீது டாங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுக்குநூறாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் ஏஜென்சி காசாவில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டு இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.நா அதிகாரி தாமஸ் வைட் பேசிய போது, இன்று மதியம் கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஐ.நா ஏஜென்சியின் பயிற்சி மையத்தை இரண்டு டேங்க் ரவுண்டுகள் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உலக சுகாதார மையமும், ஐக்கிய நாடுகளின் UNRWA அமைப்பும் பயிற்சி மையத்தை அடைய முயற்சிக்கின்றன என X தளத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |