பேருந்து, லொறி நேருக்கு நேர் மோதல்! தேநீர் கடையில் அமர்ந்திருந்தவர்கள் பரிதாப பலி
இந்திய மாநிலம் ஒடிசாவில் டேங்கர் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் பலியாகினர்.
சம்பவ இடத்திலேயே பலி
ஒடிசா மாநிலத்தின் Ganjam மாவட்டத்தில் உள்ள சமர்ஜோலா என்ற இடத்தில், டேங்கர் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் சாலையோர தேநீர் கடையில் டேங்கர் லொறி கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் கடையில் அமர்ந்திருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த பயணி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 12 பேர் இந்த விபத்தில் காயமடைந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் இரங்கல்
முதற்கட்ட விசாரணையில், பவானிபட்னாவில் இருந்து பெர்ஹாம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த டேங்கர் லொறி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.
மாநிலம் முதல்வர் மோகன் சரண் மாஜி இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என அறிவித்தார்.
இறந்தவர்களின் அடையாளம் காணப்படவில்லை என்றும், பொலிஸார் குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் நெடுஞ்சாலையை போக்குவரத்திற்காக சீரமைத்தனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |