கால்பந்து வீராங்கனைகளின் மார்பகங்களை மோசமாக விமர்சித்த அதிபர்! கடும் கோபத்தில் மக்கள்
கால்பந்து வீராங்கனைகளின் மார்பகங்களை பற்றி தான்சானியா பெண் ஜனாதிபதி அவதூறாக பேசியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து வீராங்கனைகள் ஆண்களை போன்று தட்டையான மார்பகங்களை கொண்டுள்ளதால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள தகுதியானவர்கள் இல்லை என்று தான்சானியாவின் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் பிராந்தியாவில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தேசிய ஆண்கள் அணி வெற்றி பெற்றது. அவர்களை சிறப்பிக்க ஏற்பாடு செய்திருந்த விழாவில் தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியான சாமியா சுலுஹு ஹாசன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, பெண்கள் விளையாடும் விளையாட்டுகளுக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் கால்பந்து வீராங்கனைகளுக்கு ஆண்களை போன்று தட்டையாக மார்பகங்கள் உள்ளது. கவர்ச்சி மற்றும் நல்ல மனது கொண்ட பெண்களை தான் நீங்கள் விரும்புவீர்கள்.
ஆனால் அவர்கள் இந்த குணங்களை இழந்து வெகு காலம் ஆகிவிட்டது. விளையாட்டில் வெற்றி பெற்று பதக்கத்தை வாங்கும் பொழுது எங்களுக்கு பெருமையாகதான் உள்ளது.ஆனால் அவர்களது எதிர்காலத்தை பார்க்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது.
அவர்களுக்கு திருமண வாழ்க்கை ஒரு கனவு போன்றது. ஏனென்றால் உங்களில் ஒருவர் அவர்களை மனைவியாக வீட்டிற்கு அழைத்து செல்லும் பொழுது ஆணா? பெண்ணா? என்ற கேள்வி உங்களின் பெற்றோர்கள் கேட்பார்கள் என்று தெரிவித்துள்ளார். சாமியாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.