மொத்தம் 43 பயணிகள்...ஏரிக்குள் விழுந்த தான்சானிய பயணிகள் விமானம்: பரபரப்பு வீடியோ
ஏரியில் விழுந்து தான்சானிய பயணிகள் விமானம் விபத்து.
26 பேர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தான்சானிய பயணிகள் விமானம் ஒன்று புகோபாவில் தரையிறங்க முயன்ற போது விக்டோரியா ஏரியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
தன்சானியாவின் மிகப்பெரிய நகரமான தாஸ் எஸ் சலாமில் (Das es Salaam)இருந்து முவான்சா வழியாக புகோபாவுக்கு(Bukoba) விமானம் பறந்து கொண்டிருந்தபோது புயல் மற்றும் கனமழையை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான்சானிய பயணிகள் விமானம் புகோபா ஏரிக்கரையில் தரையிறங்க முயன்ற போது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியாவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
Precision Air flight plunges into Lake Victoria when landing at Bukoba Airport in Tanzania, authorities say rescue operations underway
— Citizen TV Kenya (@citizentvkenya) November 6, 2022
?: Courtesy pic.twitter.com/WJLYfGeVjw
இந்த ஏர் விமானத்தில் 43 பேர் பயணம் செய்த நிலையில் 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிராந்திய உயர் அதிகாரி ஆல்பர்ட் சலமிலா தெரிவித்தார்.
விமானத்தின் இரண்டு விமானிகள் மற்றும் பணியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
CHARLES MWEBEYA TBC
கூடுதல் செய்திகளுக்கு: ரயில் நிலையத்தில் Poppiesகளை விற்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: வைரலாகும் வீடியோ காட்சி
ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹசன் (Samia Suluhu Hassan) பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதால் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
விபத்திற்கு லேண்டிங் கியர் சிக்கியது காரணமா? என்று சரிபார்க்க நாங்கள் விரும்புகிறோம் என சலமிலா தெரிவித்துள்ளார்.