பாகிஸ்தானுக்கு எதிராக நீண்ட நேரம் ஆடுகளத்தில்..முதல் சதமடித்த வங்காளதேச வீரர்
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வெல்வதற்கு ஒரு சிறப்பான தொடக்கம் தேவைப்பட்டது என்று வங்காளதேச வீரர் தான்ஸித் ஹசன் தெரிவித்தார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு
வங்காளதேச கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியின் தான்ஸித் ஹசன் தமிம் (Tanzid Hasan Tamim) 107 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். மேலும் இது அவரது முதல் ஒருநாள் சதமாகும்.
தான்ஸித் ஹசன்
போட்டிக்கு பின்னர் பேசிய தான்ஸித் ஹசன், "நான் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிலைத்து நின்று விளையாட விரும்பினேன். முதல் டி20 ஓவர்களில் மட்டுமே பந்து துடுப்பில் எளிதாகப் பட்டது.

ஆனால், பந்து பழையதாக மாறிய பிறகு விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. எனது முதல் சதம் அடித்தது நிச்சயமாக ஒரு சிறப்பான தருணம்தான்; இருப்பினும் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிலைத்து நின்றதுதான் மிக முக்கியமான விடயமாகும்" என்றார்.
இந்தத் தொடரில் 175 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதை தான்ஸித் ஹசன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |