போராடி சதத்தை தவறவிட்ட வீரர்: ஜிம்பாப்வேயிடம் ஆறுதல் வெற்றிபெற்ற வங்காளதேச அணி
கடைசி ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
மதேவேரே 75 ஓட்டங்கள்
ஜிம்பாப்வே, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. நிதானமாக ஆடிய கையா 25 (67) ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து சிக்கந்தர் ரஸா (11), மடண்டே (1) ஆகியோர் சொதப்ப அரைசதம் விளாசிய வெஸ்லி மதேவேரே (Wessly Madhevere) 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
எவன்ஸ் அதிரடி
கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய பிராட் எவன்ஸ் (Brad Evans) 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசினார்.

ஜிம்பாப்வே அணி 48.1 ஓவர்களில் 199 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஷோரிஃபுல் இஸ்லாம் (Shoriful Islam) 4 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது மற்றும் தன்வீர் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் தன்ஸித் ஹஸன் 94 ஓட்டங்களில் (3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
சௌமியா சர்க்கார் 82 பந்துகளில் 69 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) எடுத்தார். மசுகு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |