சிக்ஸர் மழையில் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த வீரர்! கடைசிவரை போராடி முதல் அரைசதம் விளாசல்
வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
சாஹிப்ஸாடா அரைசதம்
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி, லாகூரில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. சைம் அயூப் 4 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக, முகமது ஹாரிஸ் மற்றும் சாஹிப்ஸாடா ஃபர்ஹான் கூட்டணி 103 ஓட்டங்கள் சேர்த்தது.
Hassan Nawaz is born to play in middle order. He is the only hope who can fix our middle order issue. #PAKvBAN #PAKvsBANpic.twitter.com/QYl3FXjDpz
— Tehseen Qasim (@Tehseenqasim) May 30, 2025
முகமது ஹாரிஸ் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாகிப் ஓவரில் அவுட் ஆனார்.
மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட சாஹிப்ஸாடா ஃபர்ஹான் (Sahibzada Farhan) அரைசதம் விளாசினார். மொத்தம் 41 பந்துகளை எதிர்கொண்ட அவர், 6 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்.
அணித்தலைவர் சல்மான் அஹா 19 (12) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஹசன் நவாஸ் (Hasan Nawaz) ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் 201 ஓட்டங்கள் குவித்தது. ஹசன் மஹ்முத் மற்றும் தன்ஸிம் ஹசன் சாகிப் தலா 2 விக்கெட்டுகளும், ரிஷாத் ஹொசைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தெறிக்கவிட்ட தன்ஸிம்
பின்னர் ஆடிய வங்காளதேச அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தன்ஸித் ஹசன் 33, மெஹிதி ஹசன் மிராஸ் 23 ஆகியோர் மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தனர்.
எனினும், தன்ஸிம் ஹசன் சாகிப் (Tanzim Hasan Sakib) கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
வெற்றிக்காக போராடிய அவர் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, வங்காளதேசம் 144 ஓட்டங்களுக்கு (19 ஓவர்கள்) ஆல்அவுட் ஆனது. தன்ஸிம் ஹசன் சாகிப்பிற்கு இது முதல் அரைசதம் ஆகும்.
இதன்மூலம் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியது. கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |