மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு

By Karthikraja Jul 20, 2026 08:13 AM GMT
Report

ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் புறப்பட்டுள்ளனர்.

ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு

நிலா, செவ்வாய் என பூமியை தாண்டி விண்வெளியில் உள்ள கிரகங்களை மனிதர்கள் ஆய்வு செய்து வந்தாலும், இன்னும் பூமியில் அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகள் நிறைய உள்ளன. 

மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு | Tara Polar Stations Heading To Arctic Expedition

அப்படி பூமியில் உள்ள அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகளில், −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலை நிலவும் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியும் ஒன்று.

6 விஞ்ஞானிகள் உட்பட 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் பிரான்ஸின் லோரியன் துறைமுகத்திலிருந்து ஆர்க்டிக் பெருங்கடல் நோக்கி புறப்பட்டுள்ளனர். 

மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு | Tara Polar Stations Heading To Arctic Expedition

நேற்று பிரான்ஸ் கடல்சார் அமைச்சர் கேத்தரின் ஷபாட் முன்னிலையில், இந்தப் புறப்பாட்டைக் காண்பதற்காகப் பல நூறு மக்கள் துறைமுகத் தளங்களில் திரண்டிருந்தனர். 

ஆர்க்டிக் பிராந்தியம் பூமியின் மற்ற பகுதிகளை விட 3 முதல் 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது.

ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் குறித்த புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதுள்ளது.

தாரா துருவ நிலையம்

தாரா துருவ நிலையம் என்பது −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலையையும், விரிவடைந்து வரும் ஆர்க்டிக் கடல் பனியின் பெரும் அழுத்தத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மிதவை ஆகும். 

இது 285 அடி நீளமும் , 52 அடி அகலமும் கொண்டது. குளிர்காலத்தில் 12 பேரும், கோடையில் 20 பேரும் இதில் தங்கலாம். உள்ளே 400 சதுர மீட்டர் பரப்பளவுள்ள வசிப்பிடம் உள்ளதோடு, மருத்துவ அறை, சமையலறை ஆகியவை உள்ளன. 

மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு | Tara Polar Stations Heading To Arctic Expedition

இந்த நிலையத்தில் சூரிய மின் தகடுகள், காற்றாலை மற்றும் பயோடீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தாரா துருவ நிலையம் ஒரு பனி உடைக்கும் கப்பலின் பாதுகாப்புடன் ஆர்க்டிக் பெருங்கடலின் ரஷ்ய/நார்வே பக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும். 

குடிசை வீட்டில் வசித்தபடியே ரூ.357 கோடி மோசடி செய்த பெண்

குடிசை வீட்டில் வசித்தபடியே ரூ.357 கோடி மோசடி செய்த பெண்

அதன் பின்னர் தன்னை பனிக்கட்டிகளுக்குள் உறைந்து போக அனுமதித்து, கிரீன்லாந்துக்கும் ஸ்வால்பார்டுக்கும் இடையில் உள்ள ஃபிராம் நீரிணையை நோக்கி, வட துருவத்தைக் கடந்து, ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில், 350 முதல் 500 நாட்கள் வரை தொடர்ந்து மிதக்கும். 

மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு | Tara Polar Stations Heading To Arctic Expedition

அது 2027 ஆம் ஆண்டின் இறுதியில் அங்கு சென்றடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் செல்லும் 12 பேர் அடங்கிய குழுவிற்கு கடுமையான பனியை தாங்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு | Tara Polar Stations Heading To Arctic Expedition

நெருங்கி வரும் துருவ கரடி உள்ளிட்ட விலங்குகளைக் கண்டறிவதற்காக, ஒரு லப்போனிய மேய்ப்பு நாயும் இந்தப் பயணத்தில் அவர்களுடன் செல்கிறது.

மேலும், குழுவில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பிற்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தின் மையத்தில் பனிக்கட்டிக்குக் கீழே உள்ள கடலுக்கு நேரடியாகத் திறக்கும் ஒரு பிரத்யேகமான 1.6 மீ விட்டம் கொண்ட செங்குத்துத் துளை உள்ளது. 

மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு | Tara Polar Stations Heading To Arctic Expedition

விஞ்ஞானிகள் இந்தத் துளையின் வழியாக, கடுமையான குளிர்காலத்திலும்கூட 6,560 அடி ஆழம் வரை செல்லக்கூடியவை.கருவிகளை கடலுக்குள் இறக்கி, 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரிக்க உள்ளனர்.

பங்களிக்கும் நாடுகள்

அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து ஸ்பெயின், மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றன.

தாரா பெருங்கடல் அறக்கட்டளை மற்றும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் (CNRS) போன்ற நிறுவனங்கள் நிதி, கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளது.

இந்த பயணத்திற்கு 6 மில்லியன் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 முதல் 2045 ஆம் ஆண்டுக்கு இடையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு பயணம் என்ற விகிதத்தில் திட்டமிடப்பட்ட 10 பயணங்கள் அடங்கிய ஒரு திட்டத்தின் முதல் பயணம் இதுவாகும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US