விமானத்தில் வந்த பார்சலிலிருந்து வீசிய நாற்றம்: அதிகாரிகள் கண்ட காட்சி
வியட்நாமிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றிலிருந்து நாற்றம் வீசுவதைக் கவனித்த சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை பரிசோதித்துள்ளனர்.
அதிகாரிகள் கண்ட காட்சி
அந்த பார்சலுக்குள் சுமார் 7 கிலோ அளவுக்கு சாக்லேட் வைக்கும் சிறிய சிறிய பிளாஸ்டிக் பெட்டிகள் 1,500 இருந்துள்ளன.
சாக்லேட்டிலிருந்து இப்படி நாற்றம் வீசாதே என சந்தேகித்த அதிகாரிகள், அந்த பிளாஸ்டிக் பெட்டிகளை திறந்துபார்த்துள்ளார்கள்.
அப்போது, அந்த 1,500 பிளாஸ்டிக் பெட்டிகளுக்குள்ளும் Tarantula வகை இளம் சிலந்திகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த சிலந்திகளில் பல உயிரிழந்துவிட்டிருந்தன. உயிருடன் இருந்த சிலந்திகள் துறை சார் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த சிலந்திகள் வியட்நாமிலிருந்து ஜேர்மனியில் யாருக்கு அனுப்பப்பட்டன என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜேர்மன் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |