ட்ரம்பின் வரி யுத்தம்... ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார நெருக்கடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சில வரி விதிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அமுலில் இருக்கும் வரிகளால் ஒவ்வொரு அமெரிக்க குடும்பங்களும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும்
புதன்கிழமை பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், சில வரி விதிப்புகளுக்கு கால அவகாசம் அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், சீனாவுடன் வரி யுத்தம் அதிகரித்தது. ஏப்ரல் 9 அன்று இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போதைய வரிகளால் ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் ஆண்டுக்கு 4,400 டொலர் அதிகமாக செலவிட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதாவது 1909 ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்க நுகர்வோர் சராசரியாக 25.3 சதவீத வரியை எதிர்கொள்கின்றனர். சில வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா மீது 125 சதவீத வரியும், அமெரிக்காவுடன் வர்த்தகம் முன்னெடுக்கும் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரியும் ட்ரம்ப் விதித்துள்ளார். அத்துடன் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி என்பது அமுலில் இருக்கும்.
70 நாடுகள் புதிய வர்த்த ஒப்பந்தம்
மட்டுமின்றி, கார் உள்ளிட்ட வாகன ஏற்றுமதிகளுக்கு 25 சதவீத வரியும், அனைத்து அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கும் 25 சதவீத வரியும் அமுலில் இருக்கும். தற்போதைய வரி விதிப்புகளால் ஒவ்வொரு குடும்பங்களுக்குமான செலவு 2.7 சதவீதம் அதிகரிக்கும்.
இதனால் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் 1,900 டொலர் தொகையை இழக்கின்றனர். சீனா வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயார் என அறிவித்துள்ளதாக ட்ரம்ப் கூறி வந்தாலும், இரு நாடுகளும் அறிவித்துள்ள வரிகள் தற்போதும் அமுலில் உள்ளன.
மேலும், அறிவிக்கப்பட்ட வரி விதிப்புகள் 90 நாட்களுக்கு மட்டுமே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 70 நாடுகள் புதிய வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவை நாடியதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறி வந்தாலும், அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் இதன் முடிவுகள் வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |