ஆரம்பத்திலேயே இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த இருவர்! கொழும்பில் தொடங்கிய ஒருநாள் தொடர்
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இலங்கை துடுப்பாட்டம்
கொழும்பில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அதன்படி பதும் நிசங்க மற்றும் நிஷான் மதுஷ்க தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
8 பந்துகளை எதிர்கொண்ட பதும் நிசங்க ஓட்டங்கள் எடுக்காமல் தன்சிம் ஹசன் சாகிப் பந்துவீச்சில், லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தஸ்கின் மிரட்டல்
அதனைத் தொடர்ந்து தஸ்கின் அகமது பந்துவீச்சில் நிஷான் மதுஷ்க (Nishan Madushka) 6 ஓட்டங்களில் போல்டு ஆனார்.
அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 4 பந்துகளை சந்தித்து தஸ்கின் ஓவரில் டக்அவுட் ஆனார்.
இதனால் இலங்கை அணி 29 ஓட்டங்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |