டாடா டிஜிட்டலுக்கு புதிய CEO நியமனம்
டாடா டிஜிட்டலுக்கு புதிய CEO நியமிக்கப்படுகிறார்.
டாடா குழுமத்தின் டிஜிட்டல் பிரிவான Tata Digital, அதன் மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரியாக சஜித் சிவானந்தனை செப்டம்பர்-1 முதல் நியமிக்கவுள்ளது.
இவர் முன்னதாக Google மற்றும் JioHotstar நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றியவர்.
சஜித் சிவானந்தனின் அனுபவம்
Google-ன் GPay பிரிவில் இந்தியா மற்றும் ஆசியா-பசிபிக் பகுதிகளுக்கான நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார்.
Jio Mobile Digital Services நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். JioHotstar-ன் CEO-வாகவும் இருந்துள்ளார்.
Tata Digital நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் 3 தலைமை நிர்வாக அதிகாரிகளை மாற்றியுள்ளது.
இந்நிறுவனத்தின் Founding CEO பிரதிக் பால் 2024-ல் பதவி விலகினார். அவருக்கு பிறகு நியமிக்கப்பட்ட நவீன் தஹில்யானி 15 மாதங்களில் விலகினார்.
டாடா டிஜிட்டல் Tata Neu எனும் Super App-ஐ உருவாக்க முயன்றது. 2 பில்லியன் டொலர் முதலீடு செய்தும் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படவில்லை.
இந்நிலையில், புதிய CEO நியமனம், புதிய அலுவலகம் மற்றும் முதலீடு ஆகியவை டாடா டிஜிட்டல் வளர்ச்சிக்கு புதிய திசையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tata Digital CEO 2025, Sajith Sivanandan Tata Digital, Tata Digital leadership change, Ex-Google executive India, Tata Neu app strategy, Tata Digital restructuring, JioHotstar CEO Sajith, Tata Sons investment 2025, Indian e-commerce news, Tata Group digital business