இந்தியாவில் TATA.ev நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வெற்றி - 10 மேகா EV சார்ஜிங் நிலையங்கள் திறப்பு
TATA.ev நிறுவனம் இந்தியாவில் 10 மேகா EV சார்ஜிங் நிலையங்களை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி மின்சார வாகன நிறுவனம் TATA.ev, நாடு முழுவதும் விரைவான சார்ஜிங் வசதிகளை வழங்கும் தங்கள் மிஷனில் முக்கிய முன்னேற்றமாக, முதல் 10 மேகா சார்ஜர்கள் (MegaChargers) இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.
ChargeZone மற்றும் Statiq நிறுவனங்களுடன் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இவ்வசதிகள், முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.
TATA.ev-இன் ‘Open Collaboration’ திட்டத்தின் கீழ், Charge Point Operators (CPOs) மற்றும் Oil Marketing Companies (OMCs) உடனான கூட்டாண்மையால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய MegaCharger இருப்பிடங்கள்:
மும்பை - அஹமதாபாத் ஹைவே:
வடோடரா – Shreenath Food Hub (400kW – 6 வாகனங்கள் சார்ஜ் செய்ய முடியும்)
வாபி – Shanti Complex கோட்பந்தர் – Hotel Xpress Inn
டெல்லி - ஜெய்ப்பூர் ஹைவே (Statiq உடன்):
குருக்ராம் – SS Plaza ஹம்சாபூர் – Asli Pappu Dhaba
ஷாஹ்புரா – Hotel Highway King
பூனே - நாசிக் ஹைவே:
ராஜ்குருநகர் – Akash Misal House (120 kW)
பெங்களூரு – எலெக்ட்ரானிக் சிட்டி:
Monk Mansion – தொழில்நுட்ப பூங்கா அருகில்
உதய்பூர்:
Ramee Royal Resort – சுற்றுலா நடத்தைக்கு ஏற்ற வசதி
TATA.ev-இன் எதிர்கால EV திட்டம்:
2027க்குள் 500-க்கும் மேற்பட்ட மேகா சார்ஜர்கள் மற்றும் 4 லட்சம் சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மின்சார வாகனங்களை பரவலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முக்கிய கட்டமாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
TATA.ev MegaCharger, EV fast charging India, Tata electric vehicle charging, ChargeZone Statiq collaboration, Nexon EV charging network, Tata EV infrastructure 2025