Battery விலை குறைந்ததால், டாடா மோட்டார்ஸ் எடுத்த முடிவு: Nexon, Tiago கார்களின் விலை அதிரடி குறைப்பு
Tata மோட்டார்ஸ் நெக்ஸான், டியாகோ EVகளின் விலைகளை குறைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனங்களான நெக்ஸான் (Nexon) மற்றும் டியாகோ (Tiago) எலக்ட்ரிக் கார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
Nexon EV-யின் விலை ரூ.1.2 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Nexon EV காரின் விலை ரூ. 14.49 லட்சத்தில் தொடங்குகிறது.
அதேபோல், Tiago EVயின் விலை ரூ.70,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Tiago EV காரின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 465 கிமீ தூரம் வரை செல்லும் நீண்ட தூர Nexon EVயின் விலை ரூ.16.99 லட்சத்தில் தொடங்குகிறது.
பேட்டரிகளின் விலை குறைந்ததன் பலனாக கார்களை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
"ஒரு EV காரின் ஒட்டுமொத்த செலவில் பேட்டரியின் விலை குறிப்பிடத்தக்க பகுதியாகும். சமீபத்திய ஆண்டுகளில் பேட்டரி செல்கள் விலை குறைந்துள்ளது. இதன் பலன்களை நேரடியாக நுகர்வோருக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்" என TPEM-இன் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tata Motors, Tata Nexon EV Tiago EV, Battery price, Nexon EV and Tiago EV prices cut