இனி Long Drive-ல் கவலை இல்லை., இந்தியா முழுவதும் Ultra-Fast charging stationகளை அமைக்கும் Hyundai
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் புதிதாக 11 இடங்களில் EV கார்களுக்கான Fast charging station-களை தொடங்கியுள்ளது.
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai Motor India Limited), சார்ஜிங் வசதிகள் இல்லாமல் சிரமப்படும் EV கார் வாடிக்கையாளர்களுக்காக அதிவேக சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் புதிதாக 11 Ultra-Fast public charging station-கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தைத், மும்பை, புனே, அகமதாபாத், குருகிராம் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் அதிவேக டிசி சார்ஜிங் நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிர, டெல்லி-சண்டிகர், டெல்லி-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-விஜயவாடா, மும்பை-சூரத் மற்றும் மும்பை-நாசிக் போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில் ஐந்து அதிவேக டிசி சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து சார்ஜிங் நிலையங்களும் நாள் முழுவதும் திறந்திருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையத்திலும் DC 150 kW, DC 60 kW மற்றும் DC 30 kW திறன் கொண்ட மூன்று சார்ஜிங் புள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்களும் இங்கு சார்ஜ் செய்துகொள்ளலாம்.
இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் நீண்ட தூர பணயங்களில் (Long Drives) சிரமப்படுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வெறும் 21 நிமிடங்களில் 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வது நேரத்தை மிச்சப்படுத்தும்.
30 கிலோவாட் சார்ஜர் ஒரு யூனிட்டுக்கு ரூ.18, 60 கிலோவாட் சார்ஜர் ஒரு யூனிட்டுக்கு ரூ.21 மற்றும் 150 கிலோவாட் சார்ஜருக்கு ரூ.24 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் ஸ்லாட்டை முன்பதிவு செய்து பணம் செலுத்துவதற்கான விருப்பத்தையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த சார்ஜிங் நிலையங்களுக்கு அருகில் உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆண்டு மேலும் 10 சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது, மேலும் 2027-க்குள் இந்த எண்ணிக்கையை 100-ஆக அதிகரிக்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ultra-Fast public charging station, Hyundai Motor India Limited, Hyundai India, Electric Cars