Google Pay, PhonePeக்கு போட்டியாக வரும் Tata Pay., உரிமம் வழங்கிய RBI
இந்தியாவில் Google Pay, PhonePe, Paytm, AmazonPay, BHIM UPI ஆகிய UPI Appகளுக்கு போட்டியாக Tata Pay களமிறங்கியுள்ளது.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான டிஜிட்டல் கட்டணச் செயலியான டாடா பே (Tata Pay), இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து (RBI) பேமென்ட் அக்ரிகேட்டர் (payment aggregator licence) உரிமத்தை ஜனவரி 1-ஆம் திகதி வாங்கியுள்ளது.
இந்த உரிமத்தின் மூலம், டாடா அதன் துணை நிறுவனங்களுக்குள் அனைத்து இணையவழி பரிவர்த்தனைகளையும் மேம்படுத்த முடியும், இது நிறுவனத்தின் நிதியை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.
Tata Pay என்பது டாடா டிஜிட்டல் வணிகப் பிரிவின் கீழ் வருகிறது. இது டாடா குழுமத்தின் துணை நிறுவனமாகும், இது அதன் டிஜிட்டல் வணிகங்களைக் கொண்டுள்ளது.
டாடா குழுமம் 2022-ல் தனது டிஜிட்டல் பேமெண்ட் செயலியை அறிமுகப்படுத்தியது. இதுவரை நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து UPI பேமென்ட் செய்து வந்தது.
இதுவரை அந்த நிறுவனம் நுகர்வோரிடம் எந்த ஈர்ப்பையும் பெறவில்லை. எனவே, அந்நிறுவனம் ஒரு புதிய உத்தியை உருவாக்குகிறது. அது தான் இந்த Tata Pay UPI பேமென்ட் ஆப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tata Pay UPI App, Tata UPI App, Pay, PhonePe, Paytm, AmazonPay, BHIM UPI apps, payment aggregator licence, Reserve Bank of India